ஜாம்பவான்கள் சச்சின், லாராவை முந்திய விராட் கோலி; சர்வதேச அரங்கில் புதிய மைல்கல்லை எட்டினார்.!



world-cup-2019---india-vs-westindies---kohli-new-record

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.   மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெறும் 34-ஆவது லீக் போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடி வருகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வின் செய்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதன்படி துவக்க வீரர்களாக ரோகித் சர்மா, கேஎல் ராகுல் களம் இறங்கினர். இருவரும் நிதானமாகவே ரன்களை சேகரித்தனர். ஆனால் ரோகித் சர்மா 18 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பிறகு விராட் கோலியும் கேஎல் ராகுலும் இணைந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்த போராடினர். சிறப்பாக ஆடி வந்த கேஎல் ராகுல் 48 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தது வெளியேறினார்.



 

கேப்டன் விராட் கோலி மட்டும் வழக்கம்போல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசியில் அவரும் 72 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். கோலி 37 ரன்கள் எடுத்த போது சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட்+ ஒருநாள் + டி-20) 20,000 ரன்கள் (6613+11124+2263 ) என்ற மைல்கல்லை எட்டினார் கோலி. தவிர அதிவேகமாக இம்மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார். 

World cup 2019

417 இன்னிங்ஸ்களில் விராட் கோலி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதில் 131 டெஸ்ட் போட்டிகளும் 223 ஒருநாள் போட்டிகளும் 62 T20 போட்டிகளும் அடங்கும். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா இருவரும் 453 இன்னிங்சுகளில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

20000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய வீரர்களில் உலக அளவில் பன்னிரண்டாவது இடத்திலும் இந்திய அளவில் சர்ச்சின், ராகுல் டிராவிட்டுக்கு அடுத்து விராட் கோலி மூன்றாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.