நேற்று அப்ரிடியை தூக்கி சாப்பிட்டு ஷாகிப் அல் ஹாசன் படைத்த புதிய உலக சாதனை என்ன தெரியுமா?



world-cup-new-records---bangladesh---sahib-al-hasan

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் தற்சமயம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த வெஸ்ட் இண்டீஸ் வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் ‘பேட்டிங்’ செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எவின் லீவிஸ் (70), ஹோப் (96), ஹேட்மேயர் (50) ஆகியோர் அரைசதம் அடித்து கைகொடுக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 321 ரன்கள் எடுத்தது. 

அதன்பிறகு களமிறங்கிய வங்கதேச அணி 41.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இமாலய இலக்கான 322 ரன்களை எடுத்தது. இதன் மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.

World cup 2019

ஷகிப்அல் ஹசன் இங்கிலாந்து போட்டியை தொடர்ந்து, இந்தப் போட்டியிலும் சதம் அடித்து அசத்தினார். 99 பந்துகளில் 124 ரன்கள் சேர்த்தார் ஷகிப். 23 ரன்கள் எடுத்த போது சர்வதேச ஒருநாள் அரங்கில் 6000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். மேலும் 8 ஓவர்கள் பந்து வீசிய அவர் 54 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

தனது 190வது இன்னிங்சில் இம்மைல்கல்லை எட்டிய ஷாகிப், இந்திய அதிரடி துவக்க வீரர் சேவக் (190 இன்னிங்ஸ்), வெஸ்ட் இண்டீஸ் வீரர் சந்தர்பால் (190 இன்னிங்ஸ்) ஆகியோரின் சாதனையை சமன் செய்தார். 

World cup 2019

இதன் மூலம் குறைந்த போட்டியில் 6000 ரன்கள் மற்றும் 250 விக்கெட் கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் ஷாகிப் அல் ஹாசன் நம்பர்-1 இடத்துக்கு முன்னேறினார்.

குறைந்த போட்டியில் 6000 ரன்கள் மற்றும் 250 விக்கெட் கைப்பற்றிய வீரர்கள் பட்டியல்: 
ஷாகிப் அல் ஹாசன் - 202 போட்டிகள் 
ஷாகித் அப்ரிடி - 294 போட்டிகள் 
ஜாகஸ் காலிஸ் - 296 போட்டிகள் 
சனத் ஜெயசூர்யா - 304 போட்டிகள்

World cup 2019

தவிர, உலகக்கோப்பை அரங்கில் பங்கேற்ற முதல் 4 இன்னிங்சில் 4 முறையும் 50 ரன்களுக்கு மேல் அடித்த 4வது வீரரானார் ஷாகிப் அல் ஹாசன்.
முன்னதாக இந்தியாவின் சித்து (1987), சச்சின் (1996), தென் ஆப்ரிக்காவின் கிரேம் ஸ்மித் (2007) ஆகியோர் இம்மைல்கல்லை எட்டியுள்ளனர். 

தவிர, இந்தாண்டு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் விளாசிய பேட்ஸ்மேன்கள் பட்டியலில் ஷாகிப் நம்பர்-1 இடத்துக்கு முன்னேறினார். ஆஸ்திரேலியாவின் பின்ச் (343 ரன்கள்), இந்தியாவின் ரோகித் சர்மா (319 ரன்கள்) , ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (281 ரன்கள்) ஆகியோர் அடுத்த மூன்று இடத்தில் உள்ளனர்.