தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் இருவர் உலக சாதனை!
உலகக்கோப்பை 2019 கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30 தொடங்கி நடந்து வருகிறது. இதுவரை 9 போட்டிகள் முடிவுற்றுள்ள நிலையில் நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் மோதியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 49 ஓவர்கள் முடிவில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 288 ரன்கள் குவித்தது. பின்னர் 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவர்கள் முடிவில் 273 ரன்கள் மட்டுமே எடுத்து, ஆஸ்திரேலிய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்த போது ஆரம்பத்திலே விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. அந்த அணியின் எட்டாவது இடத்தில் இறங்கிய கோல்டர் நைல் 60 பந்துகளில் 90 அடித்து அதிக ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். உலகக் கோப்பையில் எட்டாவது இடத்தில் இறங்கி ஒருவர் அடித்த அதிகப்பட்ச ரன் இதுதான்.
அதேபோல் அந்த அணியின் பந்துவீச்சாளர் ஸ்டார்க் நேற்று ஒரு சாதனை படைத்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில், 150 விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்திய வீரர் என்ற புதிய சாதனையை ஸ்டார்க் நேற்று படைத்துள்ளார். இதற்கு முன்னர் பாகிஸ்தான் வீரர் முஷ்டாக், 78 போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த சாதனை படைத்திருந்தார். அவரது சாதனை நேற்று முறியடிக்கப்பட்டது. ஸ்டார்க் 77 போட்டிகளில் இந்த சாதனையை படைத்துள்ளார்.