#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தந்தையர் தினத்தில் தனது குழந்தைக்கு பெயர் வாய்த்த யுவராஜ் சிங்.! என்ன பெயர் தெரியுமா.?
குழந்தைகளை வளர்த்தெடுத்து குழந்தையை நல்ல இடத்திற்கு கொண்டுவருவதில் தாய்க்கு இணையாக தந்தையின் பங்கும் அதிகமாக உள்ளது. அப்படிப்பட்ட தந்தைகளை போற்றும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 3வது ஞாயிற்றுக்கிழமையில் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்தநிலையில், நேற்று தந்தையர் தினம் கொண்டாடப்படும் நிலையில் பலரும் தங்கள் தந்தைக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தந்தையர் தினமான நேற்று தனது குழந்தையின் பெயரை யுவராஜ் சிங் வெளிப்படுத்தினார்.
இந்திய அணியின் முன்னாள் அதிரடி கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங், நடிகையும், மாடல் அழகியுமான ஹாசல் கீச்சை காதலித்து கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு சில மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தந்தையர் தினமான நேற்று தனது குழந்தைக்கு 'ஒரியன் கீச் சிங்' என்ற பெயர் சூட்டியிருப்பதாக கூறி புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.