#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஐபிஎல் தொடரில் யுவராஜ் சிங்கை கவர்ந்த வீரர் யார் தெரியுமா? அவரே கூறிய தகவல்.!
2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை நாயகனாக செயல்பட்ட யுவராஜ் சிங், 2019 உலகக் கோப்பையில் ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்டியாவின் செயல் அபரிவிதமாக இருக்கும் என கூறியுள்ளார்.
ஹார்டிக் பாண்டியா குறித்து பேசியுள்ள யுவராஜ் சிங், "தடைக்காலம் நீங்கி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள அவர் (ஹார்டிக்), தன் வாழ்நாளில் மிகச்சிறந்த பார்மில் உள்ளார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
25 வயதாகும் ஹார்டிக் பாண்டியா இந்த ஐபிஎல் தொடரில் விளையாடும் விதம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கொல்கத்தாவிற்கு எதிராக 34 பந்துகளில் 91 ரன்கள் எடுத்த ஹார்டிக் பாண்டியாவின் பேட்டிங் தான் என்னை ஐபிஎல் தொடரில் மிகவும் கவர்ந்துள்ளது.
நான் அவரிடம் சமீபத்தில் பேசிய போது கூட, நீங்கள் இப்போது மிகவும் சிறப்பான பார்மில் உள்ளீர்கள். அதனை அப்படியே கடைபிடியுங்கள் என கூறியுள்ளேன். அவருடைய இந்த பார்மை மே 30ஆம் தேதி இங்கிலாந்தில் துவங்கவிருக்கும் உலகக்கோப்பை தொடரிலும் தொடருவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
வரும் உலககோப்பை தொடரில் ஹார்டிக பாண்டியாவின் பங்களிப்பு நிச்சயம் இந்திய அணிக்கு பெரும் பலத்தை கொடுக்கும். மேலும் இந்திய அணியை பொறுத்தவரை நான்காவது இடத்தில் யாரை இறக்கபோகிறார்கள் என்பது மிகவும் முக்கியமானது" என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.