#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிரபல கிரிக்கெட் வீரர் குழந்தை நட்சத்திரமாக படத்தில் நடித்திருப்பது தெரியுமா?
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த பேட்ஸ்மேனாகவும், இந்திய அணி 2007இல் டி20 உலக கோப்பையும், 2011இல் உலக கோப்பையும் வெல்வதற்கு முக்கிய காரணமாகவும் விளங்கியவர் யுவராஜ் சிங்க்.
மேலும் இந்திய அணிக்காக 400க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி இந்திய அணியில் நட்சத்திர வீரராக திகழ்ந்தவர். தொட்டெல்லாம் வெற்றி என இருந்த யுவ்ராஜ் சிங், 2011 ஆம் ஆண்டு நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டார்.
பின்னர் தனது தன்னம்பிக்கையோடு நோயில் இருந்து போராடி மீண்டு வந்த யுவராஜ் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்து சாதித்தார்.மேலும் இதனைத்தொடர்ந்து, கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக #YouWeCan என்ற தொண்டு நிறுவனம் ஒன்றையும் யுவராஜ் தொடங்கினார்.
யுவராஜ் சிங் கிரிக்கெட்டில் மட்டுமின்றி சிறுவயதிலேயே திரைப்படங்களில் தனது திறமையை நிரூபித்துள்ளார். இவர் இரண்டு பஞ்சாபி திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 1992 ஆம் ஆண்டில் வெளியான புட் சர்தரன் தே மற்றும் மெஹந்தி சகானா தி என்ற இரண்டு படங்களில் நடத்துள்ளார்.