சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
நீங்களும் உதவுங்களே.! பிறந்த நாள் பரிசாக 'சிக்ஸர் மன்னன் ' யுவராஜ் சிங்க் என்ன கேட்டுள்ளார் தெரியுமா? வைரலாகும் உருக்கமான வீடியோ.!
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த பேட்ஸ்மேனாகவும்,இந்திய அணி 2007இல் டி20 உலக கோப்பையும், 2011இல் உலக கோப்பையும் வெல்வதற்கு முக்கிய காரணமாகவும் விளங்கியவர் யுவராஜ் சிங்க்.
மேலும் இந்திய அணிக்காக 400க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி இந்திய அணியில் நட்சத்திர வீரராக திகழ்ந்து வருகிறார். தொட்டெல்லாம் வெற்றி என இருந்த யுவ்ராஜ் சிங், 2011 ஆம் ஆண்டு நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டார்.
பின்னர் தனது தன்னம்பிக்கையோடு நோயில் இருந்து போராடி மீண்டு வந்த யுவராஜ் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்து சாதித்தார்.மேலும் இதனைத்தொடர்ந்து, கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக #YouWeCan என்ற தொண்டு நிறுவனம் ஒன்றையும் யுவராஜ் தொடங்கினார்.
இதன் மூலம் கேன்சரால் பாதிக்கப்பட்ட பல ஏழைக் குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார்இந்நிலையில் இன்று தன்னுடையை 37 வது பிறந்தநாளை கொண்டாடும் யுவராஜ் வீடியோ மூலம் அனைவருக்கும் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
அதில்" கேன்சர் நோயில் இருந்து மீண்டு புதிய வாழ்வை பெற்ற நான் இன்று எனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறேன். எனக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும், வலிமையையும் கொடுத்ததற்கு இறைவனுக்கு நன்றி. நமது நாட்டில் லட்சக்கணக்கானோர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற பணமில்லாமல் இருக்கின்றனர்.
இந்நிலையில் என்னுடைய தொண்டு நிறுவனத்தின் மூலம் கேன்சரால் பாதிக்கப்பட்ட 25 ஏழைக் குழந்தைகளுக்கு உதவி செய்ய நான் உறுதியேற்கிறேன். நீங்கள் உதவி செய்ய விரும்பினால் மேலே உள்ள ‘லிங்’கை கிளிங் செய்யும். இந்த வீடியோவை பகிர்வதன் மூலமும் உதவிசெய்யலாம். நீங்கள் அளிக்கும் மிகச்சிறு தொகையும் பெரிய உதவியாக இருக்கும். உங்கள் ஆதரவுக்கு நன்றி.” என்று கூறியுள்ளார்.
Today, on my birthday, I pledge to support the treatment of 25 children suffering from cancer, through my foundation YouWeCan. To know more and contribute, visit: https://t.co/lTRwEqLm4K @hazelkeech @YUVSTRONG12#TogetherWeCan #FightCancer pic.twitter.com/1NvCpaSiMH
— YOUWECAN (@YOUWECAN) 12 டிசம்பர், 2018
இன்று 37-வது பிறந்தநாளைக் கொண்டாடும் யுவராஜ் சிங்-க்கு, அனைத்து கிரிக்கெட் வீரர்களும் வீரர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.