பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
இந்திய கிரிக்கெட் வீரரை மணந்தார் உதயம் NH4 பட நடிகை! அசத்தலாக யுவராஜ் சிங் செய்த காரியத்தை பார்த்தீர்களா! வீடியோ இதோ!
தமிழ் சினிமாவில் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான உதயம் NH4 என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை அஷ்ரிதா ஷெட்டி. அப்படத்தின் மூலம் அவர் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து அவர் ஒரு கன்னியும் 3 களவாணியும், இந்திரஜித், நான் தான் சிவா போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது ரேணிகுண்டா படத்தின் இயக்குனர் பன்னீர் செல்வம் இயக்கும் புது படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் நடிகை அஷ்ரிதா பிரபல கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டே என்பவரை காதலித்து வருவதாக தகவல்கள் பரவிவந்த நிலையில், கடந்த டிசம்பர் 2 ம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அதனை தொடர்ந்து கடந்த வாரம் திருமண வரவேற்பு விழா நடைபெற்றது.
அதில் முன்னணி கிரிக்கெட் வீரர்களும், திரையுலகினரும் கலந்துக் கொண்டனர். மேலும் அந்தவிழாவில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் கலந்துகொண்டு நடனமாடியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.