#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பேட்டிங் பிரச்சினையை தீர்க்க ரசிகர் கூறிய ஐடியா! மகிழ்ச்சியுடன் யுவராஜ் சிங் வெளியிட்ட பதிவு!
நாடு முழுவதும் கொரோனோ வைரஸ் அசுர வேகத்தில் பரவி நாளுக்குநாள் பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் கொரோனோவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது இந்நிலையில் வீட்டில் முடங்கியிருக்கும் கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளங்களில் தங்களது நேரங்களை சுவாரசியமாக செலவிட்டு வருகின்றனர்.
இவ்வாறு இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் யுவராஜ் சிங்கும் சமூகவலைதளத்தில் மிகவும் பிஸியாக உள்ளார். மேலும் சமீபத்தில் கூட கீப் இட் அப் என்ற சேலஞ்சை செய்து முடித்து அதனை செய்யுமாறு சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு சவால் விடுத்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராமில், பேட்டிங் பிரச்சினையை தீர்க்க ரசிகர் ஒருவர் கூறிய வேடிக்கையான ஆலோசனையைப் பகிர்ந்துள்ளார். அதில் ரசிகர் ஒருவர் தன்னுடைய கைகளில் போஸ்டர் ஒன்றை வைத்துள்ளார். அந்த போஸ்டரில் பேட்டிங் பிரச்சினைகளை தீர்க்க மூன்று வழிகள், யுவிக்கு கால் செய்யவும், வாட்ஸ் அப் செய்யவும் மற்றும் யுவியின் ஜூனியருக்கு காத்திருங்கள் என்று அந்த ரசிகர் எழுதியிருந்தார். இந்தப் புகைப்படத்தை யுவராஜ் சிங் சிரிக்கும் எமோஜியுடன் பகிர்ந்துள்ளார்.