#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
செவ்வாய்க்கிழமையில் இதையெல்லாம் செய்தால் முன்னேறவே முடியாது.! செவ்வாயின் மகிமை.!
நம்மில் அதிகப்படியானோர் செவ்வாய்க்கிழமையில் சுப காரியங்கள் எதையும் செய்ய மாட்டார்கள். ஆனால், இது ஒரு தவறான நம்பிக்கை. செவ்வாய்க்கிழமை மிகவும் உன்னதமான நாள். இந்த நாளில் செய்யும் காரியங்கள் நிச்சயம் வெற்றியடையும்.
செவ்வாய் பகவானுக்கும், முருகனுக்கும் இது மிகவும் உகந்த நாள். செவ்வாய் பகவானுக்கு மங்களன் என்ற பெயர் உண்டு. பெயரிலேயே மங்களம் இருப்பதால் செவ்வாய்க்கிழமையில் செய்கின்ற செயல்கள் அனைத்தும் மங்களகரமாக நிறைவேறும்.
இந்த நாளில், பொன் பொருள் உள்ளிட்டவை வாங்கினால் அது பல மடங்கு பெருகக்கூடும். ஆனால் இதே செவ்வாய்க்கிழமையில் சில விஷயங்களை செய்தால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அவை என்னவென்று பார்க்கலாம்.
செவ்வாய்க்கிழமையில் கட்டாயம் அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. லட்சுமி அம்மன் மற்றும் துர்க்கை அம்மனுக்கு செவ்வாய்க்கிழமை உகந்த நாளாகும். எனவே, இந்த நாளில் முடி வெட்டுவது, நகம் வெட்டுவது உள்ளிட்டவற்றை செய்யக்கூடாது. மகாலட்சுமி வீடு தேடி வரும் நாளில் இந்த காரியங்களை நாம் செய்வதால் நமக்கு துரதிஷ்டம் ஏற்படும்.
தயிர் மற்றும் உப்பு போன்ற விவசாய மூலப் பொருட்களை இந்த நாளில் தானமாக கொடுப்பது மற்றும் கடன் கொடுப்பது உள்ளிட்டவை நிச்சயம் கூடாது. இது பொருளாதார இழப்புக்கு வழிவகை செய்யும்.