பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் பக்தர்களுக்கு இலவச தரிசனத்திற்கு அனுமதி.!
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் நாட்டில் உள்ள அணைத்து வழிபாட்டுத்தலங்களும் மூடப்பட்டது. கொரோனா ஊரடங்கு சமயத்தில் திருமலை திருப்பதி கோவிலிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
ஆனால் திருமலை திருப்பதி கோவிலில் வழக்கமான அனைத்து பூஜைகளும் நடைபெற்று வந்தன. இதனையடுத்து கடந்த ஜூன் மாதம் 11ம் தேதி கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதால் அங்கு பக்தர்களுக்கு மீண்டும் தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டது.
இந்நிலையில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தினசரி அதிகபட்சமாக 3,000 பக்தர்களுக்கு இலவச டோக்கன் வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம் செய்வதற்கான டிக்கெட் விநியோகம் இன்று தொடங்கியது.
திருப்பதி அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்சில் இன்று காலை 5 மணி முதல் இலவச தரிசன டோக்கன் விநியோகிக்கப்படுகிறது. அலிபெரியில் இன்று டிக்கெட் பெறும் பக்தர்கள் நாளை ஏழுமலையானை இலவசமாக தரிசனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.