தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
எப்போதும் கண் திருஷ்டி பிரச்சனையால் அவதிப்படுறீங்களா?; இப்படி செய்து பாருங்கள்.!
ஒருவருக்கு திருஷ்டி இருக்கும் பட்சத்தில், அவருக்கு எப்போதும் உடல் அசதியுடன் காணப்படும். அடிக்கடி கொட்டாவி, எந்த வேலையிலும் மனம் இல்லாதது போன்றவை நடக்கும். அதேபோல, புதிய உடை அணியும் பட்சத்தில், அவை கிழிய நேரிடலாம். சில சமயம் கருப்பு கரையும் படரும். வீட்டில் ஏதேனும் பிரச்சனை, தடை, சோகம், நஷ்டம் இருக்கும்.
கணவன்-மனைவி இடையே தேவையில்லாத பிரச்சினை, சந்தேகம், உறவினர்களோடு பகை, சுப நிகழ்ச்சிகளுக்கு தடை, மருத்துவ செலவு, சாப்பிட பிடிக்காமல் போவது, அனைவரிடமும் எரிந்து விழுவது, கெட்ட கனவு, தூக்கமின்மை போன்ற எதிர்மறை விளைவுகளும் இருக்கும்.
அதேபோல, சிலருக்கு தூக்கம் அதிகமாகி, சாப்பாடு பிடிக்காமல் செல்லலாம். இதனால் உடல் நலக்குறைவு ஏற்படும். திருஷ்டி கழிக்க அந்தி சாயும் நேரத்தில் திருஷ்டி கழிப்பவர், சுற்றிக் கொள்பவர் விட வயதில் மூத்தவராக இருந்து திருஷ்டி கழிக்கலாம்.
கிழக்கு திசையை நோக்கி தனியாக அல்லது கூட்டமாக திருஷ்டி கழிக்கலாம். கூட்டத்தில் இருப்பவர்கள் பாதி பேருக்கு ஒருவரும், மீதி பேருக்கு ஒருவரும் என சுற்றும் முறை கூடாது. வீட்டில் பெரிய பாத்திரத்தில் பூக்களை மிதக்க வைப்பது, முட்கள் உள்ள ரோஜா செடியை வளர்ப்பது, பூசணிக்காய் உடைப்பது போன்றவை திருஷ்டியை கழிக்கும்.
வாழை மரம் நடுவது, திருஷ்டியை கழிக்க அல்லது பிறர் கண் நம் மீது நேரடியாக படாமல் இருப்பதற்கு உதவி செய்யும். அதேபோல குளிக்கும் போது நீரில் உப்பு சேர்த்து குளித்தால், கண் திருஷ்டியை சரி செய்யலாம். செவ்வாய்க்கிழமையில் மூன்று எலுமிச்சை பழம், 4 பச்சை மிளகாய் ஆகியவற்றை கெட்டியான கயிறில் கட்டி வீட்டு வாசலில் தொங்க விடலாம்.