தொட்ட காரியங்கள் வெற்றி பெற சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை இப்படி வழிபடுங்கள்.!



how-to-worship-anjaneya

நீங்கள் நினைத்தது அனைத்தும் உடனடியாக நிறைவேற வேண்டுமானால் சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்யுங்கள்.

இதிகாச புராணமான ராமாயணத்தில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் ஆஞ்சநேயர். இவர் அறிவு, புகழ், வல்லமை, துணிச்சல், ஆரோக்கியம் வாக்கு சாதுரியம் இவை அனைத்தையும் பெற்றவர்.

ஆஞ்சநேயரை அனைத்து தினங்களிலும் நாம் வழிபடலாம். ஆனால், சனி, புதன், வியாழன் போன்ற தினங்களில் இவரை வழிபடுவது மிகவும் சிறப்பு.

தற்போது இவரை எப்படி வழிபடலாம் என்பது பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். ஸ்ரீ ராமரின் பெயரை  தெரிவித்து வணங்குவது தான் ராமநாத வழிபாடு. இம்முறையில் ஆஞ்சநேயரை வழிபாடு செய்தால், பல்வேறு நற்பலன்கள் வந்து சேரும்.

அஞ்சநேயர்இவருக்கு வெண்ணெய் காப்பு சாற்றி வழிபாடு செய்தால், அவருக்கு சாற்றுப்பட்ட வெண்ணெய் உருகி முடிவதற்குள் நம்முடைய துன்பங்கள் விலகி, நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகமாகவுள்ளது.

வெற்றிலை சுருள் மாலையும், துளசி மாலையும் ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடித்தமானது என்பதால், சனிக்கிழமை தோறும் வெற்றிலை மாலையை சாற்றி அனுமன் கவசத்தை படித்து வந்தால், எதிரி பயம் நீங்கும். தடைபட்டு வந்த காரியங்கள் இனிதே நடந்து முடியும். சனீஸ்வரனின் பாதிப்புகளில் இருந்து விடுபட அனுமனுக்கு துளசி மாலை சாற்றி வழிபட வேண்டும்.

அஞ்சநேயர்திராட்சை பழம் அனுமனுக்கு பிடித்த நிவேதன பொருளாகும் ஆகவே நாம் நினைத்த காரியத்தில் வெற்றி பெற அனுமனுக்கு திராட்சை பழத்தை படைத்து வழிபட வேண்டும்.