கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
கழுத்தில் ருத்ராட்சம் அணிந்து இதையெல்லாம் செய்யாதீர்கள்.! ருத்ராட்சம் செய்யும் அறிவியல் அற்புதம்.!
ருத்ராட்சை அணிவதில் ஆன்மீகமும் உண்டு, அறிவியலும் உண்டு. நம் முன்னோர்கள் எதை செய்தாலும் அதில் ஒரு காரணம் இருந்து வருகிறது. நாம் இப்போது அதை தான் கடைபிடித்து வருகிறோம். இதில் முக்கியமான ஒன்று ருத்ராட்சம் அணிந்தது. இதை அணிந்து கொண்டு எதையெல்லாம் செய்யக்கூடாது, எங்கெல்லாம் போகக்கூடாது என்று பார்க்கலாம்.
ருத்ராட்சையில் இயற்கையாகவே ஆன்டிபயாட்டிக் தன்னை உள்ளது. இதை அணிவதன் மூலம் நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் ருத்ராட்சை இயற்கையாகவே எதிர்மறை ஆற்றலை ஈர்க்கக்கூடிய சக்தியை பெற்றுள்ளது. இது உடலுடன் ஒட்டி இருக்கும்போது நேர்மறை எண்ணங்கள் நம்மிடம் அதிகமாக ஈர்க்கப்படும். இதன் விளைவாக மனதில் ஒருவித தெளிவும், நிம்மதியும், அமைதியும், ஆத்ம திருப்தியும் உண்டாக்கும்.
ருத்ராட்சை நாம் அணிவதன் மூலம் பெரியம்மை, கக்குவான் மற்றும் காக்காய் வலிப்பு போன்ற கொடிய ஆபத்திலிருந்து காக்கிறது. நச்சுத்தன்மை கொண்ட புன்களையும் ஆற்றும் தன்மை கொண்டது. இதில் மிக முக்கியமான ஒன்று என்னவென்றால் வெப்பத்தை கிரகித்துக் கொண்டு சுற்றுப்புறத்தினை குளிர்விக்கும் தன்மை உடையது. எனவே இந்த ருத்ராட்சை மாலையை அணிவதன் மூலம் உடல் குளிர்ச்சி அடைகிறது.
சிலர் சிவனுக்குரிய இந்த ருத்ராட்சை மாலையை ஒரு மதக்காரர்கள் மட்டும் தான் அணிய வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அப்படி கிடையாது. அனைத்து மதத்தினரும் அணியலாம் வயது வித்தியாசம் இன்றியும் அணியலாம். இது புனிதம் நிறைந்த மங்களகரமான பொருளாக திகழ்கிறது.
ருத்ராட்சை சிவபெருமானின் கண்ணீரில் இருந்து உருவானது என்றும், அதில் 21 வகைகள் உள்ளதாகவும் ஆன்மீக ரீதியாக கூறுகின்றனர். எனவேதான் இந்த மாலையை சிவபக்தர்கள் அதிகம் அணிந்து கொள்கிறார்கள். ருத்ராட்சையை சிவப்பு, மஞ்சள், வெள்ளை நூலில் அணியலாம் மற்றும் வெள்ளி தங்கம் தாமிரத்தில் கூட அணியலாம். முக்கியமான ஒன்று என்னவென்றால், ஒருவர் இறந்த இடத்திற்கோ அல்லது தகனம் செய்யும் போதோ அணியக்கூடாது.
மேலும் இரவில் படுக்கையறைக்கு போகும் முன் கழட்டி தலையணைக்கு அடியில் வைத்துக் கொள்வதே நல்லது. இதேபோல் பிறந்த குழந்தையை பார்க்க போகும்பொழுது அணிந்து கொண்டு போகக் கூடாது. எனவே ருத்ராட்சை மாலையை அணிந்தவர்கள் கவனமாக சில விஷயங்களில் இருப்பது ரொம்பவே நல்லது.