#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
செவ்வாய்கிழமையில் செவ்வரளி மலரை இந்த தெய்வத்திற்கு சூட்டினால் என்ன நடக்கும் தெரியுமா.?!
ஒவ்வொரு பூவுக்கும் பிரத்தியேகமான மணமும், சிறப்பும் உண்டு. அதன் தன்மையை பொறுத்து அந்த மலர்களை தெய்வங்களுக்கு சூட்ட வேண்டும். செவ்வாய்க்கிழமையில் முருகனுக்கும், வீரபத்திரனுக்கும், சக்திக்கும் செவ்வரளி மலரை சூட்டி வழிபட்டால் நல்லது. செவ்வாய்க்கிழமை வரும் ராகு காலத்தில் பைரவருக்கு செவ்வரளி மாலையை அணிவித்து, துவரம் பருப்பில் சாதம் செய்து, செம்மாதுளை பழத்தை நிவேதனம் செய்து வழிபட்டு வந்தால் குடும்பத்தில் இருக்கும் சண்டை, சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை மேம்படும்.
அஷ்டமி மற்றும் பஞ்சமி திதியில் வராஹி அம்மனுக்கு செவ்வரளி மலரை கொண்டு மாலை சூட்டி பூஜை செய்தால், பண பிரச்சனை தீரும். மற்றவர்களால் ஏற்படும் துன்பங்களுக்கு தீர்வு கிடைக்கும். சிவன், லட்சுமி, சரஸ்வதி, பெருமாள், நந்தி போன்ற தெய்வங்களுக்கு இந்த செவ்வரளி மலரை அணிவிக்க கூடாது. ஸ்ரீகாளிகாம்பாளுக்கு இந்த செவ்வரளி மலரை எப்பொழுது வேண்டுமானாலும் சூட்டலாம். பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் வரும் திங்கள்கிழமையில் இதனை ஸ்ரீகாளிகாம்பாளுக்கு சூட்டி பூஜை செய்தால் குடும்பத்திற்கு பிடித்த தரித்திரம் நீங்கும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
துர்கையம்மனுக்கு புதன் மற்றும் வியாழன் இரண்டு நாட்களை மட்டும் தவிர்த்து மற்ற நாட்களில் வரும் ராகு காலத்தில் இந்த செவ்வரளி மாலையை சூட்டி எலுமிச்சம் பழம் பலி கொடுத்து திருஷ்டி கழித்து தீபம் ஏற்றி இந்த மலரை சூட்டி பூஜிக்கலாம். பரிகாரம் செய்வதற்கு செவ்வரளி மலரை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். செவ்வரளி செடியை எந்த காரணத்தை கொண்டும் வீட்டில் வளர்க்கக்கூடாது. பலர் இது அழகாக இருக்கிறது என்று வீட்டிற்கு முன்பாக வளர்க்கின்றனர். அது மிகவும் தவறு. இது காட்டில் இருக்கக்கூடிய ஒரு செடி. ஒதுக்குப்புறமான இடங்களில் மட்டும் தான் இது இருக்க வேண்டும். இந்த செடியின் காற்று நம் மீது பட்டால் நாம் அதிகப்படியான துன்பங்களுக்கு ஆளாகுவோம்.