#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குருபெயர்ச்சி 2024: வாழ்வில் வசந்தத்தை அனுபவிக்கும் மேஷ ராசி அன்பவர்களே.. முழு பலன் இதோ.!
2024 குருபெயர்ச்சி மே மாதம் 1ம் தேதியான இன்று (சித்திரை 20) நடைபெற்றது. இந்த பெயர்ச்சியில் மேஷ ராசியில் இருக்கும் கிருத்திகை 1ம் பாதத்தில் இருந்து குறு பகவான் ரிஷப ராசியில் உள்ள கிருத்திகை 2ம் பாதத்திற்கு சென்றார். மாலை 05:30 மணியளவில் இந்த பெயர்ச்சி நடந்தது. இதனால் 12 ராசிக்காரர்களுக்கும் குருவின் பெயர்ச்சி எப்படி இருக்கப்போகிறது? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள வேலையில், குருபெயர்ச்சியால் குதூகலத்தில் கொண்டாட்டமிடப்போகும் மூத்த ராசியின் பலன்களை இங்கு காணலாம்..
மேஷம்: மேஷ ராசி அன்பர்களுக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு பகவான் அமர்வதால் வீட்டில் நிம்மதி உண்டாகும், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும், இரத்த அழுத்தம், வாயு கோளாறு போன்ற உடல்நல பாதிப்புகள் நீங்கும். வங்கியில் அடமானம் இருக்கும் வீட்டு பத்திரம் மீட்க வாய்ப்பு உண்டாகும், பேச்சில் முதிர்ச்சி தெரியும், உடன் பிறந்தவர்களுடன் உரசல் போக்கு நீங்கும், உங்களை எதிர்த்தவர்கள் அடங்குவார்கள், கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் வரும்.
வதந்திகளில் இருந்து விடுபட்டு மறைமுக எதிரிகளை கண்டறிந்து ஒதுக்குவீர்கள், மருத்துவச் செலவுகள் குறையும், திட்டமிட்டபடி அயல்நாட்டு பயணங்கள் கூடிவரும், கௌரவப் பதவிகள் தேடி வரும், நல்ல வேலை கிடைக்கும், அரசியல்வாதிகள் தலைமையுடன் நெருக்கமாக இருப்பார்கள், பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றுக்கும் வாய்ப்புகள் உள்ளன. மேஷ ராசிக்கான குரு பெயர்ச்சி பிரச்சனைகளில் இருந்து விடுபடும் காலமாகவும், வாழ்வில் வசந்தத்தை வாரி வழங்கும் காலமாகவும் அமைந்துள்ளது.
மேஷம் முதல் மீனம் வரை... ஜோதிடரத்னா கே.பி. வித்யாதரன் வழங்கும் குருப்பெயர்ச்சி பலன்கள் 2024#Gurupeyarchi2024 | #Spiritual | #SakthiVikatan pic.twitter.com/aqV16YDs1f
— சக்தி விகடன் (@SakthiVikatan) May 1, 2024