#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... கொடியேற்றத்துடன் தொடங்கியது தைப்பூச திருவிழா.!
அறுபடை வீடுகளில் ஆட்சி செய்யும் தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று பௌர்ணமி தினத்தையொட்டி கொண்டாடப்படுகின்றது இந்த தைப்பூசம்.
ஒவ்வொரு வருடம் தைப்பூச திருவிழாவில் கலந்துகொள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வருவார்கள். தைப்பூசத்திற்கு பழனியில் மட்டுமில்லாமல் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய அறுபடை வீடுகளிலும் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பக்தர்கள் சென்று வழிபடுவார்கள்.
பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா, இன்று (வெள்ளிக்கிழமை) இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன்கோவில் தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த ஆன்மிக தலங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, கந்தசஷ்டி உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன.
தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு, முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்டவற்றை பக்தர்கள் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. புனித நீராடும் சண்முகநதி, இடும்பன்குளம் ஆகியவற்றில் பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்வதை தடுக்க தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளதோடு அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... வீரவேல் முருகனுக்கு அரோகரா... ஞானவேல் முருகனுக்கு அரோகரா... கந்தவேல் முருகனுக்கு அரோகரா... என்ற சரண கோஷம் எழுப்பியபடியும் வருகின்றனர் பக்தர்கள்.