பத்தாம் வகுப்பு மாணவர் தற்கொலை : தேர்வு முடிவுகள் அச்சமூட்டுகின்றனவா..!



10th class student commits suicide: Are the exam results scary

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள ஆராய்ச்சிபட்டி ஊரில் வசித்து வருபவர் செல்லதுரை, அமுதா தம்பதியினர் இவர்களது மகன் பிரபாகரன் பனவடலிசத்திரம் பகுதியிலுள்ள அரசு பள்ளியில் பத்தாவது படித்து வந்தார். பத்தாவது பொதுத் தேர்வு எழுதி உள்ள பிரபாகரன் பள்ளி விடுமுறையால் வீட்டில் இருந்துள்ளார்.

இந்நிலையில் வெளியே விளையாட சென்ற பிரபாகரன் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். இந்நிலையில் அவர்களது வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் பிரபாகரன் சடலமாக கிடப்பதாக அவரது பெற்றோருக்கு தகவல் வந்தது. மேலும் பிரபாகரன் பெற்றோர் அங்கு சென்று அவரின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

தகவலறிந்த பனவடலிசத்திரம் காவல்துறையினர், பிரபாகரனின் உடலை பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையில் தேர்வு முடிவுகள் வெளியாகும் அச்சத்தில் பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.