#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வெறும் 50 ரூபாய்க்கு 12 மருத்துவ பரிசோதனைகள்...! உடனே போங்க! வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!
சென்னை தீவுத்திடலில் சுற்றுலா கண்காட்சி நடைபெற்றுவருகிறது. இதில் பல்வேறு துறைகள் சார்பாக அரங்குகள் அமைக்கப்பட்டு அந்த துறை சம்மந்தமான தகவல்கள் பகிரப்படுகிறது.
இதில் குறிப்பாக சுகாதாரத்துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள அரங்கில், மருத்துவ கல்வி, தொழுநோய், காசநோய், புகையிலை தடுப்பு போன்ற மருத்துவம் குறித்த விரிவான விளக்கங்கள் உள்ளன. மேலும், அம்மா முழு உடல் பரிசோதனை மையமும் செயல்பட்டு வருகின்றது இதில் வெறும் 50 ரூபாய்க்கு 12 வகையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
உடல் வெப்ப நிலை, இரத்த அழுத்தம், இதய துடிப்பு, உடல் பருமன், இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு, எடை, உயரம், உடல் பருமன் குறியீடு, ரத்த அணுக்கள் எண்ணிக்கை, சர்க்கரை அளவு, பார்வை திறன் உள்ளிட்ட பரிசோதனைகள் சில நிமிடங்களில் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் உடனே கூறப்படுவதோடு வியாதிக்கான உரிய மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.
ஒருவேளை நீங்கள் தீவுத்திடல் பக்கம் சென்றால் மறக்காமல் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.