#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஸ்டைலாக முடி வெட்டிகொள்ள ஆசைப்பட்ட மகன்! தாயின் செயலால் 12ம் வகுப்பு மாணவன் தற்கொலை!
சென்னை வளசரவாக்கம் அருகே மோகனா என்பவர், கணவரை பிரிந்து, திரைப்பட படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் சமையல் பாத்திரங்களை தூய்மை படுத்தும் பணியை செய்து வருகிறார். இவரது மகன் சீனிவாசன் என்ற இளைஞன் குன்றத்தூர் விடுதியில் தங்கி, அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்தநிலையில், பொங்கல் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த மோகனாவின் மகன் சீனிவாசன், ஸ்டைலாக முடி வெட்டிகொள்ள ஆசைப்பட்டுள்ளார். ஆனால் சீனிவாசனின் விருப்பத்திற்கு மறுப்பு தெரிவித்த மோகனா, சீனிவாசனை சலூன் கடைக்கு அழைத்து சென்று, சீனிவாசனின் விருப்பத்திற்கு மாறாக முடியை வெட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்த சீனிவாசன், தாயின் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து தகவலறிந்த போலீசார் உயிரிழந்த சீனிவாசனின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.