#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மீண்டும் ஒரு சவர்மா மரணம்... 13 பேர் மருத்துவமனையில் அனுமதி.! ஷாக்கிங் ரிப்போர்ட்.!
சாலையோர உணவகத்தில் சவர்மா சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தீவிரமான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நாமக்கல்லில் உள்ள ஒரு உணவகத்தில் சவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமிக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் அதே உணவகத்தில் சாப்பிட்ட 13 பேர் உடல் உபாதைகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் உணவகத்தில் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பும் சவர்மா சாப்பிட்ட நபர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உணவு மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் பல்வேறு விதிமுறைகளை விதித்திருந்த நிலையில் மீண்டும் சவர்மா சாப்பிட்ட ஒரு சிறுமி உயிர் இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.