#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தந்தையின் கண் முன்னே 2 வயது மகளுக்கு நேர்ந்த கொடுமை.. கதறும் குடும்பத்தினர்.!
சென்னை சிட்லபாக்கம் முத்துலட்சுமி நகரில் கார்ட்டூன் டிசைனராக வேலை செய்து வருபவர் கருப்பசாமி. இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், யாழினி மற்றும் யாயினி என்ற இரட்டைக் குழந்தைகள் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் கருப்புசாமி வெளியே செல்வதற்காக காரை எடுத்துள்ளார். அப்போது யாழினியை காரின் முன் பக்கமாக நிறுத்திவிட்டு பின்னோக்கி எடுத்துள்ளார். அந்த சமயத்தில் யாருக்கும் தெரியாமல் வீட்டில் இருந்து வெளியே வந்த யாயினி காரின் பின்புறம் நின்றுள்ளார்.
இதனை கவனிக்காமல் கருப்பசாமி காரை எடுத்ததால் யாயினி காரின் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதனையடுத்து உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குழந்தையின் பெற்றோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.