பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
வளைகாப்பு விழாவில் நடந்த சோகம்.! சிக்கன் பிரியாணி சாப்பிட்டவருக்கு நேர்ந்த துயரம்!! அதிர்ச்சி சம்பவம்!!
திருவாரூர் அருகேயுள்ள திருவாசல் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை. இவரது மகன் விக்னேஷ். இவருடைய மனைவி 26 வயது நிறைந்த மாரியம்மாள். இவர் 5 மாதம் கர்ப்பமாக உள்ள நிலையில் அவருக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டது.
அதன்பின் நடைபெற்ற விருந்தில் உறவினர்களுக்கு 5 வகையான கலவை சாதம் மற்றும் பிரியாணி பரிமாறப்பட்டது. அந்த விழாவில் பரிமாறப்பட்ட சிக்கன் பிரியாணியை சாப்பிட்ட சிறிது நேரத்தில் 20க்கும் மேற்பட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் போன்ற உடல் நலபிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஆறு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 12 பேர் உடல்நலம் பெற்று வீட்டிற்கு திரும்பினர்.
மேலும் பிரியாணி சாப்பிட்ட வேலங்குடியைச் சேர்ந்த 24 வயது நிறைந்த செல்வமுருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிக்கன் பிரியாணி சாப்பிட்ட ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இத்தகைய நிகழ்வினால் வளைகாப்பு விழா நடத்திய தம்பதியினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.