#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சென்னையில் 4 வயது சிறுமியை மூர்க்கத்தனமாக பலாத்காரம் செய்து கொன்ற பக்கத்து வீட்டுக்காரர்
சென்னை ஆவடியை சேர்ந்த தம்பதியினர் ராஜேந்திரன்- செந்தமிழ்ச்செல்வி. இவர்களுக்கு கார்முகிலன் என்ற 7 வயது மகனும், சன்மதி என்ற 4 வயது மகளும் உள்ளனர்.
செந்தமிழ்ச் செல்வி தனது இரண்டாம் வகுப்பு படிக்கும் மகனை அருகிலுள்ள டியூஷனில் விடுவதற்கு சென்றுள்ளார். அப்போது சிறுமி சன்மதி தனியாக வீட்டில் இருந்துள்ளார். பக்கத்தில் செல்வதால் செந்தமிழ்ச் செல்வி தனது மகளை வீட்டில் விட்டுவிட்டு மகனை டியூஷனில் விடுவதற்கு சென்றுவிட்டார்.
பின்னர் வீடு திரும்பியதும் தனது மகளை காணாததால் பதறிப்போன செந்தமிழ்ச் செல்வி, அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்துள்ளார். குழந்தை காணாததால் திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அளித்து விட்டு வீடு திரும்பிய செந்தமிழ்ச் செல்வி திரும்பவும் அக்கம்பக்கம் எல்லா இடத்திலும் தேடியுள்ளார். கடைசியில் குழந்தை பாத்ரூமில் கோணிப்பையில் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளது.
இதனை அடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விசாரணையில் ஈடுபட்ட போலீசார் குழந்தையின் வீட்டு பக்கத்தில் உள்ள 60 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மீனாட்சிசுந்தரம் தான் இதற்கு காரணம் என்பதை கண்டுபிடித்தனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்து சுந்தரத்திடம் விசாரணை நடத்தினர். அதில் குழந்தை வீட்டில் தனியாக இருந்ததால் தனது வீட்டிற்கு விளையாடலாம் என வரவழைத்துள்ளார். அதன் பிறகு அக்குழந்தையை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அக்குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. குழந்தை உயிரிழந்ததால் அதனை ஒரு கோணிப்பையில் கட்டி பாத்ரூமில் போட்டுவிட்டதாக மீனாட்சிசுந்தரம் கூறியுள்ளார்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.