#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து..! மாஸ் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு..!
தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் இந்த ஆண்டு பொது தேர்வு ரத்து செய்யப்படுவதாக சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது.
முதல் 3 ஆண்டுகளுக்கு தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படமாட்டாது என்றும் மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் பள்ளிக்கல்வி ஆணையர் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், பழைய தேர்வு முறையே தொடரும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.