பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
#Breaking: கனமழை காரணமாக சென்னை, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!! மாவட்ட நிர்வாகம் அதிரடி..!!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியின் படி, வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், கன்னியாகுமரி, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கனமழை காரணமாக திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.