#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடந்த சோகம்! 7 பேர் பரிதாப பலி!
உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் அணைத்து இடங்களிலும் விமர்சியாக கொண்டாடப்பட்டது. வண்ண விளக்குகள், வான வேடிக்கைகள் என உலகமே புத்தாண்டை மகிழ்வுடன் வரவேற்றுள்ளது.
இந்நிலையில் புத்தாண்டு இரவு மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களை எச்சரிப்பது, விபத்துகளை தவிர்ப்பது என தமிழக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தது.
முன்னதாக புத்தாண்டு அன்று குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்டம் என காவல்துறை எச்சரித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சென்னையில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் மட்டும் இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர்.
கோடம்பாக்கம், வேளச்சேரி, காந்தி நகர் பகுதிகளில் இந்த விபத்துகள் நடந்துள்ளது. பிறந்திருக்கும் இந்த புத்தாண்டில் சாலை விபத்துகளை தவிர்ப்போம், மற்றவர்களின் உயிரையும் சேர்த்து காப்போம் என்று முடிவெடுப்போம்.
அனைவர்க்கும் 2019 ஆம் ஆண்டின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.