#வீடியோ: அரும்பு மீசை கூட இல்ல‌.. பொண்டாட்டி வேணுமாம் - தாயிடம் சண்டையிடும் சிறுவன்‌‌..!



A Child box Argue with Mother about My wife get marry me with girl

சிறார்கள் தங்களின் இளவயதில் செய்யும் சேட்டைகளுக்கும், அவர்களின் வாதங்களுக்கும் பஞ்சமே இல்லை. அன்றைய காலத்தில் நாம் செய்த சேட்டையை பாட்டிகள் கதையாக சொல்லி ரசித்திருப்போம். 

ஆனால், இன்றோ கைகளில் உள்ள செல்போன் கேமராவில் அதனை வீடியோவாக எடுத்து வைரலாக்கி வருகிறோம். அந்த வகையில், சிறுவனின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

child

அந்த வீடியோவில், தாயிடம் சண்டையிடும் சிறுவன், "என் பொண்டாட்டி எங்கே. எனக்கு பொண்டாட்டி வேண்டும். அப்பாக்கு மட்டும் பொண்டாட்டி இருக்கு. அந்த பொண்ணை எனக்கு கட்டி வை. எனக்கு பொண்டாட்டி இருந்தால் நான் அவ கூட எங்கயாச்சும் போயிடுவேன்‌. அவ இல்லாம கஷ்டப்படுறேன்" என்று அழுது கொண்டே கூறுகிறார்.

இதனைக்கேட்ட தாயோ மகனை சமாளிக்க, நீ வளர்ந்து பெரியவன் ஆனதும் அந்த பெண்ணை கல்யாணம் செய்து வைக்கிறேன். இப்போது நீ சின்ன பையன். இப்பவே பொண்டாட்டி கேட்டால் எப்படி. இப்ப திருமணம் செய்து வைக்க முடியாது. நீ வளர்ந்து பெரியவன் ஆனதும் பொண்டாட்டியோட செல்" என்று கூறுகிறார். 

பதிலுக்கு மகனோ, "நீ எனக்கு கல்யாணம் இப்ப பண்ணி வை. எனக்கு பொண்டாட்டி வேணும்" என்று தனது மழலை மொழியில் அழுதுகொண்டே கூறுகிறார். இந்த வீடியோ எப்போது யாரால்? எடுக்கப்பட்டது என்ற விபரம் இல்லை. ஆனால் சிறுவனின் செல்ல குறும்புகள் வைரலாகி வருகிறது.