#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தரைக்கிணற்றில் தலைகீழாக கவிழ்ந்த JCB.. உடல் நசுங்கி ஒருவர் பலியான சம்பவம்..!
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஜேசிபி இயந்திரம் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த தரைக்கிணற்றில் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாரமங்கலம் நடுநிலைப் பள்ளியில் கழிவறை கட்டுவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இதற்காக சிமெண்ட் மூட்டைகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அங்கு கொண்டுவரப்பட்டன.
இந்நிலையில் இந்த ஜேசிபி இயந்திரத்தில் சதீஷ் என்பவர் ஓட்டுனராக இருந்து வந்துள்ளார். இவருடன் கரியமலை என்ற முதியவரும் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு ஜேசிபி இயந்திரத்தில் வந்துள்ளனர். அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஜேசிபி இயந்திரம் அங்கிருந்த தரைக்கிணற்றில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிமெண்ட் இறக்குவதற்காக ஜேசிபி இயந்திரத்தில் வந்த கரியமலை என்ற முதியவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் ஜேசிபி ஓட்டுனரான சதீஷ் காயங்களுடன் மீட்க்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் விழுந்த ஜேசிபி இயந்திரத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.