#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடக்கடவுளே!! திருமணம் நிச்சயக்கப்பட்ட காதல் ஜோடி... லாரி சக்கரத்தில் சிக்கி உயிரை விட்ட பரிதாபம்... கதறும் குடும்பத்தினர்..!
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியை சேர்ந்தவர் பாபிலோனா. இவர் கிண்டியில் தனி அறை எடுத்து தங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அதேபோல் ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் பிரசாத். இவர் சென்னை அரும்பாக்கம் பகுதியில் தங்கி இருந்து திருமுடிவாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் டிசைனிங் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.
இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் இவர்களது காதலுக்கு பெற்றோர் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டு திருமண ஏற்பாட்டுக்கான வேலைகளும் நடந்து கொண்டிருந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு உறவினர் வீட்டில் இருந்த பாபிலோனாவை தனது இருசக்கர வாகனத்தில் பிரசாத் அழைத்துக் கொண்டு பாபிலோனா தங்கி இருக்கும் அறையில் விடுவதற்காக கிண்டி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது இவர்களது இருசக்கர வாகனமானது அருகம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது கோயம்பேட்டில் இருந்து வடபழனி நோக்கி இரும்பு கம்பிகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரி ஒன்று இவர்களது வாகனம் மீது பயங்கரமாக மோதியது.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த காதல் ஜோடி இருவரும் தூக்கி வீசப்பட்டு நிலைகுலைந்து கீழே விழுந்த நிலையில் லாரியானது இவர்கள் இருவர் மீதும் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே காதல் ஜோடி இருவரும் உயிரிழந்தனர்.
மேலும் விபத்து குறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் லாரி டிரைவரான பொன்னன் என்பவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.