பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
சினிமா பட பாணியில் நடுரோட்டில் நிர்வாணமாக ஓடிய போதை ஆசாமி... அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்!!
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியில் உள்ள அரசு மதுபான கடை ஒன்றில் நபர் ஒருவர் மது வாங்கி குடித்துள்ளார். குடித்து விட்டு மதுக்கடைக்கு அருகே இருந்த சூப்பர் மார்க்கெட் முன்பு நின்று கொண்டு அவ்வழியாக இருசக்கர வாகனம் மற்றும் அவ்வழியாக செல்லும் பெண்களிடம் ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனை கண்டு அங்கிருந்தவர்கள் வேடசந்தூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து அந்த நபரிடம் விசாரணை நடத்திய போது குடித்து விட்டு மட்டையானது போல் பேசியுள்ளார். அதனை நம்பி போலீசார் போதை தலைக்கேறித்தான் இப்படி நடந்து கொள்கிறார். போதை தெளிந்ததும் சென்று விடுவார் என நினைத்து அங்கிருந்து சென்றுள்ளனர்.
ஆனால் சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த நபர் அவ்வழியாக செல்பவர்களிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார். மீண்டும் அந்த இடத்திற்கு வந்த காவல் துறையினர் போதை ஆசாமியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது திடீரென அந்த நபர் நடுரோட்டிற்கு ஓடி சென்று ஆடைகளை கழற்றிவிட்டு நிர்வாணமாக இப்ப வாங்கடா பாத்துக்கலாம் என்று கத்தியபடி சாலையில் படுத்துள்ளார். இதனை சுற்றி இருந்த பெண்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் பார்த்து விட்டு முகம் சுளித்து உள்ளனர்.
உடனே அங்கிருந்த சார்பு ஆய்வாளர் பாண்டியன் கைலியை எடுத்து சென்று அந்த நபருக்கு காட்டி காவல் துறையினர் உதவியுடன் அங்கிருந்து அழைத்து வந்து வாகனத்தில் ஏற்றியுள்ளனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.