மனைவியையும் காப்பாற்றி, கடித்த பாம்பையும் காப்பாற்றிய கணவன்; அசரவைத்த புதுக்கோட்டை பாண்டி..!
வீட்டில் விறகு எடுக்கச் சென்றபோது மலைப் பாம்பு கடித்த பெண்ணை, கடித்த பாம்புடன் வந்து திருமயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த கணவனின் செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகிலுள்ள மேல துருவாசபுரத்தை சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி அழகு சமைப்பதற்காக வீட்டின் முன்பு அடுக்கி வைக்கப்பட்டிருந்த விறக்கை எடுக்கச் சென்றர் அப்பேது ஏற்கனவே வீட்டின் முன்பு வெட்டி வைக்கப்பட்டிருந்த பணமரத்தின் உள்ளே இருந்து வெளியே வந்த மலைப்பாம்பு அழகியின் காலை கடித்து விட்டது.
பாம்பு காலை கடித்தவுடன் அழகு சத்தம்போட்டு அலறினார், மனைவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது கணவர் பாண்டி பாம்பிடம் இருந்து மனைவியை மீட்டார். பின்னர் அவரது மனைவியை சிகிச்சைக்காக திருமயம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து, பின்னர் மருத்துவரிடம் மனைவியை கடித்த பாம்பை காட்டிவிட்டு அந்தப் பாம்பை காக்கும் எண்ணத்தில் வனத்துறை துறையினருக்கு தகவல் கொடுத்து பிடிபட்ட பாம்பை திருமயம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் அந்த மலைப்பாம்பை வனத்துறையினர் பூலாங்குறிச்சி அருகே உள்ள காப்பு காட்டில் விட்டனர். பாம்பை கண்டாலே அடித்துக் கொல்லும் இந்த காலத்தில் தன் மனைவியை கடித்த பாம்பையும் காப்பாற்றி தன் மனைவியையும் காப்பாற்றி பாம்பை வனப்பகுதிக்குள் கொண்டு சேர்த்த பாண்டியின் இந்த செயல் பொதுமக்களுக்கு வியப்பையும் ஆச்சரியத்தையும் அளித்தது.