#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கண்ணாடி டெலிவரிக்கு சென்ற மினி லாரி விபத்தில் சிக்கியது ..5 பேர் காயம்..!
மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு கண்ணாடிகளை டெலிவரி செய்வதற்காக மினி லாரியில் மதுரையை சேர்த்த சிவக்குமார்,பாண்டி, சத்தியமூர்த்தி, பேச்சிமுத்து, தனசேகர் ஆகியோர் சென்றுள்ளனர்.
அப்போது விருதுநகர் நான்கு வழிச்சாலையில் சத்திரெட்டியப்பட்டியில் அமைந்துள்ள போலீஸ் சோதனை சாவடி பேரிகார்டில் மோதாமல் இருக்க ஓட்டுநர் வாகனத்தை திருப்பியபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக சொல்லப்படுகிறது.
இந்த விபத்தில் மினி லாரியில் பயணம் செய்த 5 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.