மகனின் கல்விக்காக தன்னையே பலி கொடுத்த தாய்... சேலத்தில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்.!



a-mother-who-sacrificed-herself-for-her-son-education-a

சேலத்தைச் சார்ந்த பெண், மகன் கல்லூரி படிப்பிற்கு கட்டணம் செலுத்த முடியாததால்  விபத்தில் பலியானால் அரசு நிவாரணம் கிடைக்கும் என கருதி  பேருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையின் விசாரணையில் உண்மை வெளியாகி இருக்கிறது.

சேலம் கலெக்டர் அலுவலகம் பின்பகுதியில் இருக்கும் மறைமலை அடிகளார் தெருவை சேர்ந்தவர் பாப்பாத்தி (46). இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் மகள் மற்றும் மகனுடன் வசித்து வந்தார். இவர் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராகவும் பணியாற்றி வந்தார்.

tamilnaduஇந்நிலையில் கடந்த 28ஆம் தேதி அக்ரகாரம் பகுதியில் தனியார் பேருந்து மோதி உயிரிழந்தார் பாப்பாத்தி. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வந்தனர். அவர்களது விசாரணையில் திடுக்கிடும் உண்மை வெளியாகி இருக்கிறது.

tamilnaduஇவரது மகள் கல்லூரி படிப்பை முடித்த நிலையில் மகன் கல்லூரியில் படித்து வருகிறார். அவருக்கு இந்த ஆண்டு கட்டணமாக 47 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டி இருந்திருக்கிறது இதற்காக பாப்பாத்தி பலரிடம் பணம் கேட்டும் யாரும் கடனாக கூட தர முன்வரவில்லை. இந்நிலையில் தான் அவருக்கு தெரிந்தவர்கள் விபத்தில் பலியானால் நிவாரணம் கிடைக்கும் என்றும் மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்கும் என்றும் அவரிடம் தெரிவித்து இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து அவர் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடனே பேருந்து முன் பாய்ந்து இருக்கிறார் என்பது  அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின் மூலம்  உறுதியாகி இருக்கிறது. மகனின் படிப்பு செலவிற்காக  தாய் தனது உயிரையே  கொடுத்திருக்கும் சம்பவம்  நெகிழ்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.