#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மது போதையால் ஏற்பட்ட விபரீதம்... கோவில் பூசாரி மர்ம சாவு.!
போதையால் ஏற்படும் உயிர்ப்பலி மற்றும் பல பிரச்சனைகள் நாளைக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது மதுரையில் போதை மயக்கத்தில் தண்ணீருக்கு பதிலாக பெயிண்டில் கலக்கும் தின்னரை கலந்து குடித்த பூசாரி ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரை மாவட்டத்திலுள்ள கிடாரிப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பனையன் இவர் அங்குள்ள பெரிய நாச்சியம்மன் கோவிலில் பூசாரியாக இருந்து வருகிறார். கோவில் கும்பாபிஷேகம் பண்டிகை வருவதை முன்னிட்டு பெயிண்ட் அடிக்கும் வேலை நடைபெற்று வந்தது. இந்த வேலையை பனையனின் உறவினரான வீரணன் என்பவர் செய்து வந்தார்.
வேலைக்கு இடையே மது அருந்துவதற்காக வீரணன் டாஸ்மாக் சென்று மது வாங்கி வந்திருக்கிறார் . அந்த மதுவை
வீரணன், பனையன், கருவாமொண்டி மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் பகிர்ந்து குடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பூசாரிக்கும் மற்றவருக்கும் வாயில் நுரை தள்ளி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்களை அங்கிருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பனையனின் உடல்நிலை மோசமடையவே அவரை மதுரைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக வீரணன் மற்றும் அந்த சிறுவனிடம் நடத்திய விசாரணையில் மதுவில் தண்ணீருக்கு பதிலாக பெயிண்டில் கலக்கும் தின்னரை கலந்து அருந்தியதாக தெரிய வந்துள்ளது. அதனை உறுதிப்படுத்த, மேற்கொண்டு காவல்துறை விசாரணை தொடர்ந்து வருகிறது.