ஆண்களின் விரைவு மரணத்துக்கு காரணம் என்ன? லீக்கான வீடியோ.. கலாய்த்துத்தள்ளும் நெட்டிசன்கள்.!



a Trending Video about Man Life Span 

 

உலகளவில் ஆண், பெண் என ஒட்டுமொத்த மக்கள் தொகை எண்ணிக்கை 8.2 பில்லியன் ஆகும். இதில் இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் மட்டும் தலா 1.4 பில்லியன் மக்கள் தொகையை கொண்டுள்ளன. நிலப்பரப்பில் மிகப்பெரிய நாடாகவும், பல நேரங்களை வைத்து செயல்பட்டு வரும் ரஷியாவில் கூட மக்கள்தொகை 14.38 கோடி தான். 

சர்வதேச அளவில் வசித்து வரும் மக்களில், ஆண்களின் சராசரி வயது காலம் என்பது வெகுவாக குறைந்து வருகிறது. குறிப்பாக பெண்களை விடவும் ஆண்களுக்கு சராசரி வயது குறைந்து இருக்கிறது. மது, போதை, உடலை கவனிக்காமல் தொடர் வேலை, அலட்சியத்தால் நேரும் மரணம் என பல விஷயங்கள் இதன் காரணியாக இருக்கிறது.

இதையும் படிங்க: அம்மாடியோவ்.. எத்தான்தண்டி.. சுற்றுலாப்பயணிகளை மிரளவைத்த ராட்சத அனகோண்டா..!

சராசரி வயது குறைவு

இந்நிலையில், ஆண்கள் எதனால் தங்களின் வாழ்நாள் முடிவதற்குள் இறக்கின்றனர் என்பது உதாரணமாக, ஒரு கலாய் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், சிங்கம் போன்ற வனவிலங்குடன், அதனைப்போல உடை மாற்றிக்கொண்டு சுற்றும் இளைஞர் வீடியோ எடுத்து வருகிறார். 

எலான் மஸ்க் ரியாக்சன்

இதனை கலாய்க்கும் பொருட்டு மேற்கோளிட்டுள்ள பதிவர், அதனை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவை மேற்கோளிட்டு எக்ஸ் & ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க்கும் சிரித்து தனது மகிழ்ச்சி மற்றும் விமர்சனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதையும் படிங்க: பொம்மை லாரிக்கு மண் நிரப்ப ஒரிஜினல் ஜேசிபி.. குட்டி சுட்டீஸாக மாறிய ஆபரேட்டர்.. நெகிழவைக்கும் வீடியோ.!