பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
உயிரை குடித்த காதல் மோகம்..! தண்டவாளத்தில் காதல் செய்த இளம் ஜோடி ரயில் மோதி பலி..!
சென்னை அருகே சிங்கப்பெருமாள் கோயிலில் உள்ள ரயில் தண்டவாளத்தில் காதல் ஜோடி ரயில் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அலெக்ஸ் (24). செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் நண்பர்களுடன் வாடகைக்கு வீட்டில் தங்கி, மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஷெர்லின் (20) என்ற பெண்ணும் அலெக்ஸ்சும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர்.
இவர்கள் இருவரும் சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து செல்லும் பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி சந்தித்து பேசுவது வழக்கமாக இருந்துள்ளது. வழக்கம் போல நேற்று நள்ளிரவு அலெக்ஸ், ஷெர்லின் இருவரும் தண்டவாளத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாகவும், அப்போது அந்த வழியாக வந்த மின்சார ரயில் அவர்கள் இருவர் மீதும் மோதி விபத்துக்குள்ளானதாகவும் கூறப்படுகிறது. இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
இது குறித்த தகவல் அறிந்த தாம்பரம் ரயில்வே காவலர்கள் இருவர் சட்டத்தையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.