#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பரபரப்பான தேர்தல் நேரத்தில் திடீரென தேர்தலில் இருந்து விலகிய பிரபல வேட்பாளர்.. யார் தெரியுமா..?
தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்த நடிகர் மன்சூர் அலிகான் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை அடுத்து திமுக, அதிமுக காட்சிகள் தொடங்கி சுயேச்சை வேட்பாளர்கள் வரை அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் கடந்த மக்களவை தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் அந்த கட்சியில் இருந்து விலகி, தமிழ் தேசிய புலிகள் கட்சியை தொடங்கினார்.
மேலும் வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அதுமட்டும் இல்லாமல் தனது தொகுதி மக்களை தினமும் சந்தித்து அவர்களிடம் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்த நடிகர் மன்சூர் அலிகான் தற்போது திடீரென தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
"பிரசாரத்துக்கு எங்கு சென்றாலும் யாரிடம் பணம் பெற்றுவிட்டு போட்டி என கேட்கிறார்கள். இது மிகவும் சங்கடமாக உள்ளது.” இதுவே நான் தேர்தலில் போட்டியிடாததற்கு காரணம்" என மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.