#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வீட்டில் இருந்து வந்த துர்நாற்றம்..! தூக்கில் தொங்கிய இளம் நடிகை.! அதிர்ச்சி தகவல்.!
மன அழுத்தம், காதல் தோல்வி, வாய்ப்பு கிடைக்காமல் இருப்பது போன்ற பல காரணங்களால் துணை நடிகைகள் சிலர் தற்கொலை செய்துகொள்வது சினிமா துறையில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் சென்னை திருவெற்றியூரில் துணை நடிகை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் துணை நடிகையாக நடித்து வந்தவர் பத்மஜா. இவருக்கு திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் ஆகியுள்ள நிலையில் 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவருக்கும், இவரது கணவர் பவன் என்பவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்ததாகவும், இதனால் பவன் ஆந்திராவுக்கு சென்றுவிட்ட நிலையில் குழந்தையை உறவினர் ஒருவரிடம் கொடுத்துவிட்டு பத்மஜா திருவெற்றியூரில் வீடு எடுத்து தங்கியுள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக இவர் தங்கியிருந்த வீடு திறக்கப்படாமல் இருந்துள்ளது. மேலும், வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்ததால் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டில் தூக்கு மாட்டி சட்டமாக கிடந்த பத்மஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை அடுத்து நடந்த விசாரணையில், பத்மஜா பெங்களூருவில் உள்ள தன்னுடைய அக்காவுக்கு அழுதபடியே வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்று தெரிவித்துள்ளார். அந்த வீடியோவையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர்.
பத்மஜாவின் தற்கொலைக்கு என்ன காரணம்? கொலையா? தற்கொலையா என போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.