#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#BigBreaking: அதிமுக முன்னாள் அமைச்சர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.!
முன்னாள் அதிமுக அமைச்சர் சரோஜா ராசிபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
கடந்த அதிமுக ஆட்சியில் சத்துணவு மற்றும் சமூகநலத்துறை அமைச்சராக பணியாற்றியவர் மருத்துவர் சரோஜா. இவர் தனது உறவினரிடம் சத்துணவு துறையில் வேலை வாங்கி கொடுப்பதாக பணம் வாங்கியுள்ளார். மேலும், அவரின் வாயிலாக 15 பேரிடம் இருந்து மொத்தமாக ரூ.76 இலட்சம் வசூல் செய்துள்ளார்.
பணத்தை வாங்கிய முன்னாள் அமைச்சர் சரோஜா, வேலை வாங்கிக்கொடுக்காமல் இழுத்தடித்து நிலையில், அதனை உறவினர் கேட்டபோது கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னாள் அமைச்சரின் உறவினர் ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் பேரில் விசாரணை நடந்து வந்த நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சர் சரோஜா, ராசிபுரத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். சத்துணவுத்துறை வேலை மோசடி தொடர்பான புகாரில் ரூ.76 இலட்சம் பெற்று ஏமாற்றியதாக பதிவு செய்யப்பட்ட புகாரில் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.