#Breaking: காலையிலேயே பரபரப்பு... 50 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது..!



AIADMK Supporters 50 Persons Arrested By Cops 


சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி, 15 க்கும் மேற்பட்ட நிலுவை வழக்கு கொண்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ஞானசேகரன் (வயது 37) என்பவரால் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஞானசேகரனை கைது செய்தனர். 

வெளியான எப்.ஐ.ஆர்

இதனிடையே, மாணவி எப்.ஐ.ஆர் தகவல் அறிக்கை வெளியான நிலையில், அதில் ஞானசேகரன் மாணவியை மிரட்டும்போது, நான் அழைக்கும்போதெல்லாம் போனில் பேசும் சாருடன் வந்து உல்லாசமாக இருக்க வேண்டும் என கூறியதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அந்த சார் யார்? என்ற விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

AIADMK

யார் அந்த சார்?

அரசியல் அல்லது தொழிலதிபர் பின்னணி இருக்கலாம் என்ற காரணத்தால், எதிர்கட்சிகளான அதிமுக, பாஜக, நாதக, பாமக உட்பட பல்வேறு கட்சிகள் அந்த சாரை விரைந்து கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து போராடி வருகிறது. இதனால் அண்ணா பல்கலை வளாகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருக்கின்றனர். 

இதையும் படிங்க: "சட்டம் ஒழுங்கு செத்துவிட்டது, முதல்வர் உறங்குகிறார்" - கல்லூரி மாணவி பலாத்கார விவகாரத்தில் பாஜக அண்ணாமலை காட்டம்.!

அதிமுக மாணவரணி போராட்டம்

ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கட்சியினர் என போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். இதனிடையே, இன்று காலை அதிமுக ஐடி விங் பிரிவு தலைவர் & மாணவரணி அமைப்பு செயலாளர் கோவை சத்யன் தலைமையில் அதிமுகவினர் கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் முன்பு போராட்டம் நடத்த முயன்றனர். 

முன்னதாகவே அங்கு குவிக்கப்பட்டு இருந்த காவல்துறையினர், போராட்டக்காரர்களை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் இன்று காலை முதலாகவே கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகம் பரபரப்பில் இருக்கிறது.

இதையும் படிங்க: அடிதாங்காமல் தப்பி ஓடிய காதலன்.. 19 வயது கல்லூரி மாணவி பலாத்கார விவகாரத்தில், அதிர்ச்சி தகவல்.!