"சட்டம் ஒழுங்கு செத்துவிட்டது, முதல்வர் உறங்குகிறார்" - கல்லூரி மாணவி பலாத்கார விவகாரத்தில் பாஜக அண்ணாமலை காட்டம்.!



  BJP Annamalai on Anna University Girl Rape Case 

காதலருடன் தனிமையில் இருந்த ஜோடியை நோட்டமிட்டு, காதலனை அடித்து துரத்திவிட்டு காதலியை 2 பேர் கும்பல் பலாத்காரம் செய்த துயரம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், இரண்டாம் ஆண்டு மெக்கானிக்கல் துறையில் பயின்று வந்த 19 வயது கல்லூரி மாணவி, தனது ஆண் நண்பருடன் தனியாக பேசிக்கொண்டு இருந்தபோது மர்ம நபரால் பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்டனர். டிச.23 அன்று மாலை 7 மணிக்கு மேல் இரவு நேரத்தில் காதலருடன் உணவு சாப்பிட்டுவிட்டு, நடைப்பயிற்சிக்கு சென்ற காதல் ஜோடி, தனிமையில் பேசிக்கொண்டு இருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. 

இதையும் படிங்க: அடிதாங்காமல் தப்பி ஓடிய காதலன்.. 19 வயது கல்லூரி மாணவி பலாத்கார விவகாரத்தில், அதிர்ச்சி தகவல்.! 

பாதுகாப்பு எப்படி இருக்கிறது?

இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தபோது, "சென்னையில் மிகவும் பாதுகாப்பான பகுதியில் இந்த துயரம் நடந்துள்ளது. கிராமம் முதல் நகரம் வரை பலாத்காரம் தொடருகிறது. நேற்று இரவு சகோதரன் - சகோதரி பேசிக்கொண்டு இருந்தபோது, மர்ம நபர் 2 பேர் சேர்ந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அதிக பாதுகாப்பு உள்ள இடத்த்தில் இந்த விஷயம் நடக்கிறது என்றால், தமிழ்நாட்டின் பாதுகாப்பு எப்படி இருக்கிறது. 

Girl Rape Case

கடுமையான நடவடிக்கை வேண்டும்

சிசிடிவி கேமிரா வேலை செய்யவில்லை என்று கூறுகிறார்கள். இதனால் தமிழ்நாடு அரசை பாஜக கடுமையாக கண்டிக்கிறது. காவல்துறையை கையில் வைத்துள்ள தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் உறங்கிக்கொண்டு இருக்கிறார். சட்டம் ஒழுங்கு தமிழ்நாட்டில் செத்துவிட்டது. காவல்துறையில் அரசியலை கலந்துவிட்டார்கள், இதனால் காவல்துறை செயலிழந்து இருக்கிறது. மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கல்லூரி மாணவி வளாகத்திற்குள் பலாத்காரம் செய்திருக்கிறார்கள் என்றால் எப்படி தைரியம் வந்தது? செயலிழந்துள்ள தமிழ்நாடு அரசு காவல்துறைக்கு அதிகம் கொடுத்து செயல்பட வேண்டும்" என பேசினார்.

இதையும் படிங்க: அடிதாங்காமல் தப்பி ஓடிய காதலன்.. 19 வயது கல்லூரி மாணவி பலாத்கார விவகாரத்தில், அதிர்ச்சி தகவல்.!