அடிதாங்காமல் தப்பி ஓடிய காதலன்.. 19 வயது கல்லூரி மாணவி பலாத்கார விவகாரத்தில், அதிர்ச்சி தகவல்.! 



in Chennai Anna University Campus Girl Rape Case 

கல்லூரி மாணவியிடம் அத்துமீறல் நடந்த விவகாரத்தில் 2 பேர் கும்பலின் அதிர்ச்சி செயல் பதறவைத்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், இரண்டாம் ஆண்டு மெக்கானிக்கல் துறையில் பயின்று வந்த 19 வயது கல்லூரி மாணவி, தனது ஆண் நண்பருடன் தனியாக பேசிக்கொண்டு இருந்தபோது மர்ம நபரால் பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்டனர். டிச.23 அன்று மாலை 7 மணிக்கு மேல் இரவு நேரத்தில் காதலருடன் உணவு சாப்பிட்டுவிட்டு, நடைப்பயிற்சிக்கு சென்ற காதல் ஜோடி, தனிமையில் பேசிக்கொண்டு இருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. 

காதலர் ஓட்டம்

இந்நிலையில், மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள காவல்துறை அதிகாரிகள், அண்ணா பல்கலையில்., நெடுஞ்சாலை ஆய்வகத்திற்கு பின்னால் இருந்த மாணவி, அவரின் ஆண் நண்பரை மர்ம நபர் தாக்கி இருக்கிறார். தாக்குதலை சமாளிக்க இயலாமல் ஆண் நண்பர் தப்பிச் சென்று இருக்கிறார். காதலன் தப்பியோடிய பின்னர், மாணவியை பலாத்காரம் செய்யவும் முயற்சி நடந்துள்ளது. 

இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்காரம்; நடந்தது என்ன? காவல்துறை பரபரப்பு விளக்கம்.!

Girl Rape Case

மாணவி பலாத்காரம்

மாலை சுமார் 7:30 மணிக்கு மேல் இந்த சம்பவம் நடந்துள்ளது. காதலன் பயந்து ஓடிய காரணத்தால், பலாத்காரம் முயற்சி நடந்த நிலையில், மாணவி தன்னை காப்பாற்ற மாதவிடாய் என தெரிவித்தபோதிலும், குற்றவாளி மாணவியை இயற்கைக்கு மாறாக வற்புறுத்தி பலாத்காரம் செய்தது நடந்தது. டிசம்பர் 23 அன்று குற்றம் நடைபெற்று, 24 அன்று புகார் பெறப்பட்டது. மாணவியிடம் விசாரணை நிறைவுபெற்று, அவருக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை தனிப்படை குழு மர்ம நபரை அதிகாரிகள் தேடி வருகிறார்கள். சந்தேக நபர் ஒருவரிடமும் விசாரணை நடந்து வருகிறது. மாணவியின் புகாரின் பேரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: #Breaking: கல்லூரி வளாகத்திலேயே மாணவியை நிர்வாணப்படுத்தி பாலியல் சீண்டல்; காதலருடன் தனிமையில் இருந்தபோது பகீர்.!