வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
அமீரின் உயிர் தமிழுக்கு திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியது தணிக்கைக்குழு.!
பருத்திவீரன், ராம், மௌனம் பேசியதே, ஆதி பகவான், இறைவன் மிகப்பெரியவன் உட்பட பல படங்களை இயக்கி வழங்கிய அமீர், வடசென்னை படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.
இதனையடுத்து, மூன் பிக்சர்ஸ், வி ஹவுஸ் ப்ரொடக்சன் தயாரிப்பில் ஆதம் பாவா இயக்கத்தில், இயக்குனர் அமீர் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் உயிர் தமிழுக்கு.
இந்த படத்தில் ஆனந்தராஜ், சாந்தினி, ஸ்ரீதரன், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, சுப்பிரமணிய சிவா, ராஜ்கபூர் உட்பட பலரும் நடித்திருக்கின்றனர்.
வித்யாசாகர் இசையமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். அரசியல் பின்னணியில் உருவாகி உள்ள இப்படம், சமீபத்தில் தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், படத்திற்கு யுஏ தரசான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.