#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
காசு கொடு.. இல்லனா உன் அந்தரங்க போட்டோவை.. குடும்ப நண்பரை போல பழகி செய்யும் காரியமா இது?.!
அமெரிக்காவில் பயின்று வரும் சென்னை பெண்ணின் ஆபாச புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்திடுவதாக மிரட்டி பணம் பறிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையை சார்ந்த 55 வயது பெண்மணி, காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இந்த புகாரில், "அமெரிக்காவில் பயின்று வரும் தனது மகளிடம், அவரின் அந்தரங்க புகைப்படத்தை அனுப்பிய மர்ம நபர், ரூ.1.80 கோடி பணம் தராத பட்சத்தில், புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்வதாக மிரட்டுகிறார்" என்று தெரிவித்துள்ளார்.
புகாரில் பெண் மர்ம நபரின் அலைபேசி எண்ணை பதிவு செய்திருந்த நிலையில், அந்த எண்ணின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பின்னர், போரூர் இலட்சுமி நகர் பகுதியை சார்ந்த ரமேஷ் என்பவனை காவல் துறையினர் கைது செய்தனர்.
அவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ரமேஷ் அமெரிக்காவில் இருந்து வந்த நேரத்தில் இளம்பெண்ணுடன் அறிமுகமாகி, குடும்ப நண்பரை போல பழகி, பெண்ணின் வீட்டிற்கு செல்கையில் இளம்பெண்ணின் அந்தரங்க புகைப்படத்தை இரகசியமாக பதிவு செய்தது தெரியவந்துள்ளது. பின்னர், சென்னைக்கு வந்த ரமேஷ், புகைப்படங்களை இளம்பெண்ணுக்கு அனுப்பி மிரட்டி இருக்கிறார். தற்போது கைது செய்யப்பட்டுள்ள ரமேஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.