பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அச்சோ இப்படி ஆயிடுச்சே... தீராத வயிற்று வலியால் விபரீத முடிவு எடுத்த 18 வயது இளைஞன்.!
லால்குடி அருகே தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த 18 வயது இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் .
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்துள்ள கொன்னைகுடி கிராமத்தைச் சேர்ந்த சூசை ராஜ் என்பவரது மகன் வில்பர்ட் ராஜ் வயது 18. இவருக்கு கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதற்கு அவர் சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார்.
ஆயினும் வயிற்று வலி குறைந்த பாடில்லை. இதனால் மனம் உடைந்த வில்பர்ட் ராஜ் கடந்த ஜூலை 23ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனைத் தொடர்ந்து உறவினர்கள் இவரை மீட்டு லால்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார் .
அங்கு சிகிச்சை பெற்று வந்த வில்பர்ட் ராஜ் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது தந்தை சூசை ராஜ் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .