96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
"'ச்சீ.. இவனெல்லாம் ஒரு மனுஷனா."? மச்சினியின் 10 வயது குழந்தையை... தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்.!!
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தனது மச்சினியின் 10 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக குழந்தையின் பாட்டி கொடுத்த புகாரின் பேரில் ஆட்டோ டிரைவரின் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆட்டோ டிரைவர் முகமது அன்சார்
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அன்சார். 33 வயதான இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி குடும்பத்தை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி பெண் குழந்தை ஒன்று உள்ளது.
மச்சினியுடன் கள்ளக்காதல்
திருமணம் ஆன நிலையிலும் முகமது அன்சார் தனது மனைவியின் சகோதரியுடன் கள்ளத்தொடர்பில் இருந்திருக்கிறார். மேலும் தனது கள்ளக்காதலியை தனி வீட்டில் குடி வைத்து அவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி: இறந்தவர்களின் எண்ணிக்கையை மறைக்கிறதா அரசு தரப்பு.? எவிடன்ஸ் கதிர் பரபரப்பு பேட்டி.!!
10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
இவரது காதலிக்கு 10 வயதில் மகள் ஒருவர் இருந்திருக்கிறார். தனது காதலி வீட்டில் இல்லாத போது அவரது 10 வயது மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார் முகமது அன்சார். இதற்கு அந்த சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்துள்ளார்.
காவல்துறையில் புகார்
தனக்கு நடக்கும் கொடுமைகளை சகித்துக் கொள்ள முடியாத சிறுமி பக்கத்து தெருவில் உள்ள பாட்டியிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறிய அழுது இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரது பாட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முகமது அன்சாருக்கு எதிராக புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
தர்ம அடி
இந்நிலையில் மது அருந்திய முகமது அன்சார் சிறுமியின் பாட்டி வீட்டிற்கு சென்று அந்த சிறுமியை தன்னுடன் வருமாறு அழைத்திருக்கிறார். இதற்கு சிறுமி மறுக்கவே அவரை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் முகமது அன்சாரை பிடித்து கடுமையாகத் தாக்கி சிறுமியை மீட்டுள்ளனர். காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முகமது அன்சாரை காவல்துறையினர் கைது செய்து மேல் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: கொடூரம்... உல்லாசத்திற்கு இடையூறான மாமியார்.!! 17 வயது சிறுவனுடன் சேர்ந்து தீர்த்துக் கட்டிய மருமகள் .!!