96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
கள்ளக்குறிச்சி: இறந்தவர்களின் எண்ணிக்கையை மறைக்கிறதா அரசு தரப்பு.? எவிடன்ஸ் கதிர் பரபரப்பு பேட்டி.!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந்த விஷச்சாராய மரணங்கள் தமிழகத்தையே உலுக்கி இருக்கிறது. இதுவரை 58 பேர் அதிகாரப்பூர்வமாக இறந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அரசு தரப்பில் இருந்து மறைக்கப்படுவதாக பிரபல சமூக செயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர் தெரிவித்திருக்கிறார்.
கள்ளக்குறிச்சி மரணங்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்த 50க்கும் மேற்பட்டோர் கடந்த சில தினங்களாக உயிரிழந்தனர். மேலும் பல பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருக்கின்றனர். இந்த நிகழ்வு தமிழகத்தில் மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக முழுமையான விசாரணை தேவை என பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது கோரிக்கையையும் கண்டனத்தையும் முன் வைத்திருக்கின்றன.
எவிடன்ஸ் கதிருக்கு அனுமதி மறுப்பு
இந்நிலையில் மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினரும் சமூக செயல்பாட்டாளருமான எவிடன்ஸ் கதிர் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களை பார்வையிடுவதற்காக சென்றார். ஆனால் அரசு அதிகாரிகள் மற்றும் மருத்துவமனையின் டீன் எவிடன்ஸ் கதிரை நோயாளிகளை சந்திக்க அனுமதிக்கவில்லை. மேலும் மேலிடத்திலிருந்து அவருக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கள்ளச்சாராய் விவகாரத்தில் திமுகவுக்கு தொடர்பு.? ஆதாரங்களுடன் ஆளுநரை சந்தித்த அண்ணாமலை.!!
செய்தியாளர் சந்திப்பு
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த எவிடன்ஸ் கதிர் கள்ளக்குறிச்சி விஷ சாராயத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60-ற்கும் அதிகமாக இருக்கும் என தெரிவித்திருக்கிறார். மேலும் அரசாங்கம் உண்மையான தகவலை வெளியிட மறுக்கிறது எனவும் குற்றம் சாட்டியுள்ளார். மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு மருத்துவமனைக்கு செல்வதற்கு தனக்கு அனுமதி மறுக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். நான் மருத்துவமனைக்குள் சென்றால் உண்மைகள் வெளிவந்து விடும் என அரசு பயப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம்; ஆளுநர் ஆர்.என் ரவியை நேரில் சந்திக்கிறார் அண்ணாமலை.!