96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
கொடூரம்... உல்லாசத்திற்கு இடையூறான மாமியார்.!! 17 வயது சிறுவனுடன் சேர்ந்து தீர்த்துக் கட்டிய மருமகள் .!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 17 வயது கல்லூரி மாணவனுடன் கள்ள உறவில் இருந்ததை மாமியார் கண்டித்ததால் அந்த சிறுவனுடன் சேர்ந்து பவித்ரா என்ற பெண் தனது மாமியாரை கொன்று எரித்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் கரிய பெருமாள் வலசை பகுதியைச் சேர்ந்தவர் அலமேலு. 48 வயதான இவருக்கு ஏழுமலை(20) மற்றும் சேட்டு(18) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர் . தனது மூத்த மகனான ஏழுமலைக்கு தனது அண்ணன் மகளான பவித்ராவை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து வைத்திருக்கிறார் அலமேலு. இவர்களுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.
கள்ளக்காதல்
இந்நிலையில் பவித்ராவிற்கு பக்கத்து வீட்டில் உள்ள 17 வயது கல்லூரி மாணவரான மணிகண்டன் என்ற சிறுவனுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. பவித்ரா மற்றும் மணிகண்டன் ஆகியோர் அடிக்கடி ரகசியமாக சந்தித்து வந்துள்ளனர்.
இதையும் படிங்க: கண்ணை மறைத்த காமம்... கொலையில் முடிந்த கள்ளக்காதல்.!! எமனாக மாறிய நண்பன்.!!
தனிமையில் உல்லாசம்
பவித்ரா ஆடு மேய்க்கும் போது காட்டுப்பகுதியில் தனது கள்ளக்காதலன் மணிகண்டனை அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்திருக்கிறார். இவர்களது கள்ளத்தொடர்பு அலமேலுவுக்கு தெரிய வரவே அவர் பவித்ரா மற்றும் மணிகண்டனை கண்டித்துள்ளார். எனினும் அவர்கள் இருவரும் தங்களது கள்ள உறவை தொடர்ந்து உள்ளனர்.
அலமேலுவை கொலை செய்தது எப்படி
இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று பவித்ரா வழக்கம் போல் ஆடு மேய்க்க சென்று இருக்கிறார். அவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அலமேலு காட்டிற்கு சென்று அவரை தேடி இருக்கிறார். அப்போது பவித்ரா மற்றும் மணிகண்டன் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனைக் கண்ட அலமேலு அவர்கள் இருவரையும் ஆபாசமாக திட்டி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் மற்றும் பவித்ரா ஆகியோர் அலமேலுவை கொலை செய்துவிட்டு அவரது உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். இதன் பின்னர் எதுவும் தெரியாதது போல் வீட்டிற்கு திரும்பி இருக்கின்றனர்.
பவித்ரா மற்றும் மணிகண்டன் சிக்கியது எப்படி
இந்நிலையில் தனது தாய் நீண்ட நேரம் வீடு திரும்பாததால் அலமேலுவின் இரண்டாவது மகன் சேட்டு தனது தாயை தேடி காட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது காட்டுப்பகுதியில் அலமேலு எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சேட்டு இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வருகை புரிந்த காவல்துறையினர் அலமேலுவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது பவித்ரா மீது சந்தேகம் ஏற்படவே அவரை காவல்துறை விசாரிக்க தொடங்கியது.
கைது செய்யப்பட்ட கள்ளக்காதலர்கள்
காவல்துறை விசாரணையில் பவித்ரா முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தங்கள் பாணியில் விசாரித்ததில் கள்ளக்காதலன் மணிகண்டனுடன் சேர்ந்து அலமேலுவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து மணிகண்டன் மற்றும் பவித்ரா ஆகிய இருவரையும் காவல்துறை கைது செய்துள்ளது.
இதையும் படிங்க: இயற்கை உபாதைக்கு சென்ற மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்.!! 25 வயது வாலிபரின் வெறி செயல்.!!