#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சுற்றுலா வந்த இடத்தில் வழி தவறி போன வடமாநில மூதாட்டி.. அசால்டாக தூக்கிய போலீஸ்..!
உத்திரபிரதேசத்தில் இருந்து தமிழகத்திற்கு சுற்றுலா வந்த போது வழி தவறிபோன மூதாட்டி ஒருவர் சில்வர் பீச் பகுதியில் சந்தேகத்திற்க்கு இடமான வகையில் சுற்றித்திரிந்து வந்துள்ளார்.
இதனைக் கண்ட போலீசார் மூதாட்டியை மீட்டு விசாரணை நடத்தினர். ஆனால் அந்த மூதாட்டிக்கு போஜ்புரி மொழி தவிர வேறு எந்த மொழியும் தெரியாத காரணத்தினால் விசாரிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து அந்த மூதாட்டியை கடலூர் முதியோர் காப்பகத்தில் பத்திரமாக தங்க வைத்திருந்தனர்.
பின்னர் போஜ்புரி மொழி தெரிந்த நபர் ஒருவரை அழைத்து வந்து மூதாட்டியிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் உத்திரபிரதேச மாநிலம் பன்வாரியை சேர்ந்த குஷ்மரணி எனவும் ராமேஸ்வரத்திற்கு சென்று விட்டு ரயிலில் சொந்த ஊர் திரும்பும்போது வழி தவறி கடலூரில் இறங்கியதாகவும் அந்த மூதாட்டி கூறியுள்ளார். இதனையடுத்து மூதாட்டியின் உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த மூதாட்டியின் உறவினர்களிடம் அவர் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார்.